Friday, June 5, 2009

எச்சரிக்கை: கணிணியால் கெடுதலும் உண்டு!




எச்சரிக்கை: கணிணியால் கெடுதலும் உண்டு!


அலுவலகங்களில் கம்யூட்டரின் வருகை பெரும் புரட்சியை ஏற்படுத்தி யிருக்கிறது என்பதும் உற்பத்தியின் அளவைக் கூட்டியிருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், மனித உடல மைப்பு கம்ப்யூட்டரைப் பயன்படுத்து வற்கு ஏற்றபடி வடிவமைக்கப்படவில்லை என்பதால் தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. கம்ப்யூட்டர் சார்ந்த உடல் நலப் பிரச் சனைகள் பெரும்பாலும் உடல்சார்ந்தவை தான். தொடர்ந்து ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருப்பது உடலில் உள்ள மூட்டு களிரிலும் தசைகளிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவரி, கண் பிரச்னை ஆகியவையும் தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படலாம். இவையெல்லாம் பின்னால் வரக்கூடிய பெரிய பிரச்னைகளின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். கம்ப் யூட்டரை இப்போதுதான் பெரிய அளவில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கி றோம் என்பதால், அதனால், எந்த அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்படக் கூடும் என்பது தெரியவர இன்னும் பல ஆண்டுகளாகலாம். கம்ப்யூட்டர் தொடர் பான நோய்களைக் குணப்படுத்துவதைத் தவிர வராமல் தடுப்பதே சிறந்தது. தொடர்ந்து கம்ப்யூட்டரை ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு பார்வைக் குறைபாடு, டென்ஷனால் ஏற்படும் தலைவலி, முதுகுவலி, ஸ்ட்ரெஸ் ஆகியவை ஏற்படும். இதைத் தடுப்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்புவரை முதுகுவலிஎன்பது முதுகுவரி என்பது அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குவதனால் ஏற்படும் பிரச்னையாக இருந்தது. ஆனால், இப்போது நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்வதால் ஏற்படும் பிரச்னையாக இருக்கிறது. பெங் களூரில் 1200 ஐ,டி புரொஃபஷனல் களிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி அவர்களில் 75 சதவீதம் பேருக்கு கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நலப் பிரச்னை இருந்தது. அமெரிக்கா வில் மட்டும் கம்ப்யூட்டர் சார்ந்த நோய்களால் ஏற்படும் உற்பத்தி இழப்பு, நஷ்டஈடு ஆகியவற்றால் வருடத்திற்கு 60லி100 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. கம்ப்யூட்டரைச் சார்ந்து பணியாற் றும் 650 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்த ஒரு ஆண்டிற் குள்ளாகவே 55 சதவீதம் பேருக்கும் கம்ப்யூட்டர் சார்ந்த உடல் நலப் பிரச்னை ஏற்பட்டது. 76 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு நோய்க்கூறு தென்பட்டது. உடல் நலப் பிரச்னை ஏற்பட்ட 60 சதவீதம் பேருக்குகழுத்து, தோள்பட்டை வலியும் பிடிப்பும் இருந்தது. இவர்களில் 6 மென்பொருள் வல்லுனர்கள் 25லிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் வேலை யையே விடவேண்டியிருந்தது. புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும் போது, மனித உடலுக்கு ஏற்றபடி அந்தக் கருவிகளை வடிவமைக்க வேண்டும். தற்போது மனித உடலமைப்பிற்கேற்ப வடிவமைக்கப் பட்ட கீ போர்டுகள், மவுஸ், கணிணித் திரைகள், இருக்கைகள் தற் போது கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்து ஒரளவுக்குப் பலன ளிக்கும். விலை தான் கொஞ்சம் அதிகம்.தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்து வதால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், அதைத் தவிர்ப்பதற்கான முறை, பிரச்னை ஏற்பட்டால் அதற்கான தீர்வு ஆகியவை பற்றி நிறுவனங்கள் தங்கள் பணியாளர் களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியா வைப் பொறுத்தவரை, கம்யூட்டர் தொடர் பான உடல் நலப் பிரச்னைகளை பணி சார்ந்த பிரச்னையாக பார்க்கப்படுவ தில்லை. இதனால், கம்யூட்டரால் ஏற்படும் உடல் நலப் பிரச்னைகளுக்கு நிறுவனங் களிரிருந்து நஷ்ட ஈடு பெற முடியாது. ஆனால், அமெரிக்கா, கனடா, ஆஸ்தி ரேரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்தியதால் உடல்நலப் பிரச்னை கள் ஏற்பட்டால், அதற்கு அந்த நிறுவனங் களிரிருந்து நஷ்ட ஈடு பெற முடியும். இந்தியா வில் ஒரு அனாசின் மாத்திரை வாங்க கூட முடியாது.

No comments:

Post a Comment