Friday, June 5, 2009

எச்சரிக்கை: கணிணியால் கெடுதலும் உண்டு!




எச்சரிக்கை: கணிணியால் கெடுதலும் உண்டு!


அலுவலகங்களில் கம்யூட்டரின் வருகை பெரும் புரட்சியை ஏற்படுத்தி யிருக்கிறது என்பதும் உற்பத்தியின் அளவைக் கூட்டியிருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், மனித உடல மைப்பு கம்ப்யூட்டரைப் பயன்படுத்து வற்கு ஏற்றபடி வடிவமைக்கப்படவில்லை என்பதால் தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. கம்ப்யூட்டர் சார்ந்த உடல் நலப் பிரச் சனைகள் பெரும்பாலும் உடல்சார்ந்தவை தான். தொடர்ந்து ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருப்பது உடலில் உள்ள மூட்டு களிரிலும் தசைகளிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவரி, கண் பிரச்னை ஆகியவையும் தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படலாம். இவையெல்லாம் பின்னால் வரக்கூடிய பெரிய பிரச்னைகளின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். கம்ப் யூட்டரை இப்போதுதான் பெரிய அளவில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கி றோம் என்பதால், அதனால், எந்த அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்படக் கூடும் என்பது தெரியவர இன்னும் பல ஆண்டுகளாகலாம். கம்ப்யூட்டர் தொடர் பான நோய்களைக் குணப்படுத்துவதைத் தவிர வராமல் தடுப்பதே சிறந்தது. தொடர்ந்து கம்ப்யூட்டரை ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு பார்வைக் குறைபாடு, டென்ஷனால் ஏற்படும் தலைவலி, முதுகுவலி, ஸ்ட்ரெஸ் ஆகியவை ஏற்படும். இதைத் தடுப்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்புவரை முதுகுவலிஎன்பது முதுகுவரி என்பது அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குவதனால் ஏற்படும் பிரச்னையாக இருந்தது. ஆனால், இப்போது நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்வதால் ஏற்படும் பிரச்னையாக இருக்கிறது. பெங் களூரில் 1200 ஐ,டி புரொஃபஷனல் களிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி அவர்களில் 75 சதவீதம் பேருக்கு கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நலப் பிரச்னை இருந்தது. அமெரிக்கா வில் மட்டும் கம்ப்யூட்டர் சார்ந்த நோய்களால் ஏற்படும் உற்பத்தி இழப்பு, நஷ்டஈடு ஆகியவற்றால் வருடத்திற்கு 60லி100 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. கம்ப்யூட்டரைச் சார்ந்து பணியாற் றும் 650 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்த ஒரு ஆண்டிற் குள்ளாகவே 55 சதவீதம் பேருக்கும் கம்ப்யூட்டர் சார்ந்த உடல் நலப் பிரச்னை ஏற்பட்டது. 76 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு நோய்க்கூறு தென்பட்டது. உடல் நலப் பிரச்னை ஏற்பட்ட 60 சதவீதம் பேருக்குகழுத்து, தோள்பட்டை வலியும் பிடிப்பும் இருந்தது. இவர்களில் 6 மென்பொருள் வல்லுனர்கள் 25லிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் வேலை யையே விடவேண்டியிருந்தது. புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும் போது, மனித உடலுக்கு ஏற்றபடி அந்தக் கருவிகளை வடிவமைக்க வேண்டும். தற்போது மனித உடலமைப்பிற்கேற்ப வடிவமைக்கப் பட்ட கீ போர்டுகள், மவுஸ், கணிணித் திரைகள், இருக்கைகள் தற் போது கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்து ஒரளவுக்குப் பலன ளிக்கும். விலை தான் கொஞ்சம் அதிகம்.தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்து வதால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், அதைத் தவிர்ப்பதற்கான முறை, பிரச்னை ஏற்பட்டால் அதற்கான தீர்வு ஆகியவை பற்றி நிறுவனங்கள் தங்கள் பணியாளர் களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியா வைப் பொறுத்தவரை, கம்யூட்டர் தொடர் பான உடல் நலப் பிரச்னைகளை பணி சார்ந்த பிரச்னையாக பார்க்கப்படுவ தில்லை. இதனால், கம்யூட்டரால் ஏற்படும் உடல் நலப் பிரச்னைகளுக்கு நிறுவனங் களிரிருந்து நஷ்ட ஈடு பெற முடியாது. ஆனால், அமெரிக்கா, கனடா, ஆஸ்தி ரேரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்தியதால் உடல்நலப் பிரச்னை கள் ஏற்பட்டால், அதற்கு அந்த நிறுவனங் களிரிருந்து நஷ்ட ஈடு பெற முடியும். இந்தியா வில் ஒரு அனாசின் மாத்திரை வாங்க கூட முடியாது.

திருக்குர்ஆன் பிரதிகளை கரையில் இறக்க அனுமதி மறுப்பு!

திருக்குர்ஆன் பிரதிகளை கரையில் இறக்க அனுமதி மறுப்பு!
குஜராத் மாநிலத்தில் முந்த்ரா துறைமுகத்தில் திருக்குர்ஆன் பிரதிகள் கொண்டு வரப்பட்ட பெட்டகத்தை தரை இறக்க சுங்கத் துறை அனுமதி மறுத்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.கோரெவல்லி கிராமத்தில் உள்ள டூபன்னி என்ற முஸ்லிம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக இந்த குர்ஆன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி, கட்ச் வளைகுடாவில் அமைந்துள்ளது. 4000 குர்ஆன் பிரதிகள் மற்றும் பல்வேறு ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்ட 500 குறுந்தகடுகளும் அங்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அவையனைத்தும் விற்பனைக்காக அனுப்பப்பட்டவையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. குர்ஆன் பிரதிகள் மற்றும் குறுந்தகடுகள் அனைத் தும் டூபன்னி கடற்கரையோர மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காகவே அனுப் பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சரியான ஆவணங்கள் இல்லாமை யால் சம்பந்தப்பட்ட பொருட்களை கரை யிறக்க அனுமதிக்க முடியாது என முந்த்ரா துறைமுக சுங்கத்துறையின் உதவி ஆணை யர் அசோக் நகாடே தெரிவித்தார். குர்ஆன் பொதுமக்களுக்கு விநியோ கிப்பது ஒன்றும் சட்டவிரோதமான காரியமல்ல. எனவே அதனை கரை யிறக்க அனுமதி மறுத்தது தவறு என பிரபல பத்திரிகையாளர்கள் தெரிவித்த னர். விசாரணைகளின் முடிவில் அதனை உரியவரிடம் ஒப்படைப்பதே சரியானதாக இருக்க முடியும் என சமூகவியலாளர்கள் கூறியுள்ளனர்.இந்த 4000 குர்ஆன் பிரதிகளும் காரவல்லியில் உள்ள அப்துல் கய்யூம் கான் என்பவருக்கு அனுப்பப்பட்டுள் ளது. இவர் காரவல்லியில் ஜாமியா தாருல் மஸீஹா என்ற பெயரில் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் ஒன்றை நடத்தி வருகிறார். இது அவரது பாட்டனார் ஹாஜி தலில்கான் என்ப வரால் 1952ல் தொடங்கப்பட்டதாகும்.அப்துல் கய்யூமின் தந்தையார் ஹைதர் கான் துபையில் பணிபுரிந்து வருகிறார். அவர் இந்த குர்ஆன் பிரதி கள் மற்றும் குறுந்தகடுகளை அனுப்பி யிருக்கிறார். நான் முறையான ஆவணங்களை சமர்ப்பித்திருக் கிறேன். ஒவ்வொரு குர்ஆன் பிரதியை யும் குறுந்தகடையும் சோதித்த பின்னரும் இன்னும் அனுமதி மறுப்பது உரிமை மீறலாகும் என அப்துல் கய்யூம் தெரிவித்தார்.அப்துல் கய்யூமின் தாருல் மஸீஹா மதரஸா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஜாமியா ஸலஃபியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தின் கீழ் வருவதாகும். துபையில் உள்ள குஜராத் வாழ் முஸ்லிம்கள் மன முவந்து தந்த அன்பளிப்புகளால் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் பிரதி களை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு என்ன நிர்பந்தம் வந்தது?இஸ்ரேலுடன் இந்திய அரசு வைத்திருக்கும் கூடா நட்பு தன் வேலையைக் காட்டுகிறதா?

பாப்ரி மஸ்ஜித் வழக்கு : முக்கிய ஆவணங்கள் மாயம் திடுக்கிட வைக்கும் தகவல்கள்!




பாப்ரி மஸ்ஜித் வழக்கு : முக்கிய ஆவணங்கள் மாயம் திடுக்கிட வைக்கும் தகவல்கள்!


அபூசாலிஹ்

பாப்ரி மஸ்ஜித் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் உத்தரப் பிரதேச செயலகத்திலிருந்து மர்மமான முறையில் தொலைந்து போன தகவல் வெளியாகி நாடெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1949ல் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரப் பிரதேசத் தின் அன்றைய முதலமைச்சருக்கு தந்தி மூலம் முக்கிய உத்தரவு ஒன்றை அனுப் பினார். பாப்ரி மஸ்ஜித் வளாகத் தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அப்புறப் படுத்த வேண்டுமென அந்த தந்தியில் கூறப்பட்டிருந்தது. அந்த அதி முக்கியமான தந்தி மாயமாகியுள்ளது.அத்தோடு 1949 ஆம் ஆண்டில் உத் தரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளருக்கும் ஃபைசாபாத் மாவட்ட மற்றும் நகர நிர்வாகத்தினருக்கும் இடை யேயான முக்கிய கடித பரிமாற்றங்களும், ஆவணங்களும் மாயமான முறையில் தொலைந்து போன திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி நாடெங்கும் பதட்டத்தீயை பற்ற வைத்துள்ளது. நாட்டின் அதிமுக்கிய ஆவணங்கள் மாயமாய் மறைந்த மர்மம் அம்பலமான விதம் வேதனையும் விநோதமும் நிறைந்ததாகும். பாப்ரி மஸ்ஜித் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சிறப்பு நீதிமன்றம் 2002 ஆம் ஆண்டிலிருந்தே கோரி வந்தது. சிறப்பு நீதிமன்றத் தின் கட்டளையை காதில் வாங்காமல் உத்தரப் பிரதேச அரசு கடந்த ஏழு மாதங் களாக கால தாமதப் படுத்தியது. பொறுமையிழந்த சிறப்பு நீதிமன்றம் உத்தரப் பிரதேச தலைமைச் செயலாளரே உடனடியாக நீதிமன்றத்தின் நேர் நிற்குமாறு ஆணை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளர் குறிப்பிட்ட கோப்புகள், ஆவணங்கள் இல்லை என தெரிவித் தார். இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை பாப்ரி மஸ்ஜித் வழக்குகளை நடத்தி வரும் மூத்த வழக்கறிஞர் ஜஃபர்யாப் ஜீலானியுடன் இணைந்து வழக்கு நடத்தி வரும் வழக்கறிஞர் முஷ்தாக் அஹ்மத் சித்திக்கீ தெரிவித்திருக்கிறார். முக்கியத்து வம் மிகுந்த கோப்புகள் எவ்வாறு மாயமாகிப் போனது? அதன் முக்கியத்து வம் எவ்வாறு தெரியாமல் போனது? நேரு உபி முதல்வருக்கு பிறப்பித்த உத்தரவு, உ.பி தலைமைச் செயலகத்துக் கும், ஃபைசாபாத் நிர்வாகத் துக்கும் இடையிலான கடிதப் போக்கு வரத்துக் கள் உள்ளிட்ட முக்கிய ஆவ ணங்கள் அனைத்தையும் குறித்த விபரங் கள் உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக் கப் படவேண்டும் என சிறப்பு நிதிமன்ற உத்தர வுக்கு ஜுலை 6ம் தேதி உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் என்ன பதில் அளிக்கப் போகிறார்? ஆவணங்கள் காணா மல் போனதற்கு நீதிமன்றம் என்ன செய் யப் போகிறது? பாப்ரி மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அநீதி இழைக்கப் படுவதாக குமுறும் மக்கள் இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறார் கள்? பொறுத்திருந்து பார்ப்போம்

Wednesday, June 3, 2009

தேர்தல் முடிவுகள் ஒரு சுயபரிசோதனை (வீடியோ)http://www.tmmk.in/videos/MHJ_election.htm

தேர்தல் முடிவுகள் ஒரு சுயபரிசோதனை (வீடியோ)உரை பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் http://www.tmmk.in/videos/MHJ_election.htm

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியிள் மனிதநேய மக்கள் கட்சியினர் மீது திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் (13.05.2009)

Slid

Spin

Cool Pool

மனிதநேய மக்கள் கட்சியின் விளம்பரபடம்